நூதனசாலையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவ சந்தேக நபர்கள் 5 மாதத்தின் பின்பு கைது.
தேசிய நூதனசாலையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏனைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய நூதனசாலையில் திருட்டு சம்பவம் இடம்பெற்று 5 மாதங்களாகின்றது. எங்களால் 5 மாதத்திற்கு பிறகு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்திருக்கின்றது. திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றை நாங்கள் கைப்பற்றியிருக்கின்றோம். இதில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதோடு அவர்களை கைது செய்ய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment