4100 க்கு மேலான ஊழல் விசாணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சிறப்பு புலனாய்வு அலகு தாயாரித்த 4014 உயர்மட்ட அரச ஊழியர்களின் நிதி மோசடி மற்றும் ஊழல் சம்பந்தமான விசாரணை அறிக்கை ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் மேற்படி அலகினால் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ½ ஆண்டுகளில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விசாரணை அறிக்கையை கையளித்த பின்னர் மேற்கொண்டு என்ன செய்வதென்பது ஜனாதிபதியின் செயலாளரதும் ஜனாதிபதியினதும் பொறுப்பு எனறு சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அலகிற்கு 2010, 2011 மற்றும் 2012 ஆகஸ்டுவரை முறையே 1316, 1568 மற்றும் 1230 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதே நேரம், இந்த விசாரணை அறிக்கையை வைத்து ஜனாதிபதி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றார் என்றும் எத்தனை விசாரணைகள் நடாத்தப்பட்டன, எத்தனை பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மவிமு பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசானாயக்கா கூறினார்.
0 comments :
Post a Comment