Thursday, August 9, 2012

செயற்கைக்கால் உற்பத்தி செயல்திட்டத்திற்கு ஜப்பான் 4 மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கையின் செயற்கைக்கால் உற்பத்தி செயல்திட்டத்திற்கு ஜப்பான் 4 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒபப்ந்தம ஜப்பான் தூதரகத்தில் நேற்று கைசசாத்திடப்பட்டுள்ளது.

இலஙகைக்கான ஜப்பான் தூதுவர் நொபு ஹித்தோ ஹொபோ மற்றும் கொழும்பு நிர்க்கதியற்றோர் சங்கத்தின் தலைவர் திருமதி கல்யாணி ரணசிங்க இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்நன்கொடை மூலம் நவீன இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, உற்பத்தியை அதிகரிக்கலாமென திருமணி ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பான் இலங்கை இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தும் வகையில் இதுபோன்ற செயல்திட்டங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென ஜப்பான் தூதுவர் இங்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment