பின்லேடனை கொல்லும் நடவடிக்கையை 3 முறை நிராகரித்த ஒபாமா: புதிய தகவல்
அல்கொய்தா இயக்க தலைவரும், பயங்கரவாதியுமான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா பல ஆண்டுகளாக வேட்டையாடி வந்தது. இறுதியாக பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு பங்களாவில் அவர் தங்கியிருப்பதை கண்டுபிடித்து அதிரடிப்படையை அனுப்பி கடந்த ஆண்டு மே மாதம் சுட்டுக் கொன்றது. ஆனால் ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்றது முதலே பலமுறை திட்டம் தீட்டப்பட்டு அவை கைவிடப்பட்டு இருக்கின்றன.
இது பற்றி அமெரிக்காவில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு புதிய புத்தகத்தில் ரிஷி மினிடெர் என்பவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில்,
பின்லேடனை கொல்லும் நடவடிக்கை எடுக்க கடந்த ஆண்டு(2011) ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் திட்டமிடப்பட்டு அவற்றை ஒபாமா நிராகரித்து விட்டார். சிறிய விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்த அவர் விரும்பாமல் இருந்தார். எனவே இந்த பொறுப்பை உளவுப்படை டைரக்டர் லியான் பெனட்டா, ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ், வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் முடிவுக்கே விட்டு விட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment