பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் மனைவி சீத்தா விஜேலதா கணவனால் தாக்கப் பட்டதாக ஜயவர்தனபுர மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்ததும், தமது பிரச்சினையை ஊடகங்கள மூலம் உலகுக்கு தெரியப்படுத்தியது நீங்கள்தான் என்று மருத்துவமனை ஊழியர்களக்கு எதிராக பேயாட்டம் ஆடியதும் நாடறிந்ததே.
சீத்தா விஜேலதாவின் முதல் திருமணத்தில் பிறந்த, வர்த்தகம் செய்யும் தன் மகனுக்கு பாலிதவிடம் வாங்கிக் கொடுத்த 39 இலட்சம் ரூபாவை திருப்பிக் கேட்டதனை அடுத்தே இவர்களுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
சீத்தாவின் முதல் திருமணம் 1982 ல் சட்டபூர்வமாக முடிவுக்கு வந்ததுள்ளது. இதன்பின் 1990ல் பொலிஸ்காரரான பாலிதவுடன் தொடர்பு ஏற்பட்டது. பாலிதவுக்கும் ஏற்கனவே ஒரு மனைவியின் மூலம் ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்கள் சீத்தாவின் பொறுப்பிலேயே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment