Saturday, August 11, 2012

இந்திய யாப்பின் 356 பிரிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிசீலிக்கலாம் – சுப்பிரமணியசுவாமி.

இந்திய அரசியலமைப்பின் 356 வது பிரிவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தலாம் என பன்னாட்டு மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள இலங்கை வந்துள்ள இந்திய ஜனதாக் கட்சித் தலைவர் கலா. சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடி பின்னர் கருத்து தெரிவித்த அவர், பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுப்பதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும், அப்படி வழங்கினாலும் ஏதேனும் தீங்கான நிலைமையேற்படாத விதத்தில் மாநில பொலிஸ் சேவையை மேவிச் செல்லும் மத்திய அரசு ஏற்பாடுகளை கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வை எட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சகல தமிழ் கட்சிகளையும் ஒன்று திரட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத் தேர்வுக்குழுவின் ஊடாகவே தீர்வுச் செயன்முறையில் திட்டத்தின் முக்கிய விடயங்களை அடைய வேண்டும் என்றும் ஜனாதிபதி விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment