2500/- மற்றும் Z பிரச்சினை போதும். வேறு பிரச்சினை வேண்டாம் – பந்துலவை நோக்கி ஜனாதிபதி.
கடைசியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா, ஆசிரிய உதவியாளர்னளாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு கொடுக்கப்படும் ரூபா 3000/= ஐ ரூபா 6000/= ஆக உயர்த்துவதற்கு முன்மொழிவைக் கொண்டுவந்தார். அதற்கு ஜனாதிபதி அனுமதி அளித்தார்.
அடுத்து வெளிமடைப் பிரதேசத்தில் ஒரு பாடசாலையின் கூரையைத் திருத்துவதற்கு அந்த பாடசாலை வளவில் உள்ள சந்தன மரத்தை வெட்டி விற்று பணத்தைப் பெற்றுக் கொள்ள அனுமதி கேட்டார் அமைச்சர் குணவர்தனா. அதற்கு ஜனாதிபதி இவ்வாறு கூறினார்
'பந்துல நீர் முன்பு 2500/= ரூபாவில் ஒருவர் ஒரு மாதம் வாழ்க்கை நடத்தலாம் என்று கூறி பிரச்சினையை ஏற்படுத்தினீர், அடுத்து இஸற் புள்ளி பிச்சினை. இப்போது அது போதாதென்று இன்னொரு பிரச்சினையை உருவாக்கப பார்க்கிறீரா ?' .
இதேநேரம் இஸற் பிரச்சினையை உருவாக்கிய சகலருக்கும் கடும் தண்டனை வழங்குக என்று ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் தெரிவித்துள்ளார். இஸற் புள்ளி பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இதுவரையில் கல்வித் துறையில் பயங்கர பிரச்சினைகளை உருவாகியுள்ள நபர்களையும் தரப்பினரையும் உடனடியாக அடையாளம் கண்டு தராதரம் பார்க்காது அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாத விடத்து, தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இதனை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல விருப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற பின்வரிசை எம்பிக்களோடு சென்று ஜனாதிபதியைச் சந்தித்த நாமல் ராஜபக்ஷ கூறினார்.
0 comments :
Post a Comment