22 வது தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் யசூசி அக்காசி
ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூசி அக்காசி இலங்கைக்கு 6 நாள் உத்தியோகபூர்வம் விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கைக்கு வந்துள்ளார். இவர் 22 வது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் அவதானிப்பதே இவரது விஜயத்தின் நோக்கமாகும் என்றும், வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் உட்பட தற்போது செயல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை அவதானிப்பதற்காக இப்பிரதேசங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் காலப்பகுதியில் அரின் உயர் மட்ட பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளையும் அவர் சந்தித்து உரையாடவுள்ளார்.
இதேவேளை மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் வாஹிட் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவரது இவ்விஜயத்தின் போது 2 இரு தரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.
இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு நிலவுகின்றது. அண்மையில் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாலைத்தீவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இலங்கையில் இராணுவ மற்றும் பட்டப்படிப்பிற்கான கற்கை நெறிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தனது பதவியை ராஜினாமா செய்ததன் பின்னர் மொஹமட் வாஹிட் ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் பதவியேற்றன் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
0 comments :
Post a Comment