16,478 பட்டதாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் வேலைவாய்ப்பு.
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் திட்டத்திற் கமைய 6 மாதகால பயிற்சியை பூர்த்தி செய்த தெரிவு செய்யப்பட்ட 16 ஆயிரத்து 478 பட்டதாரிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு செப்டம்பர் முதலாம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்திருப்பதாக அமைச்சர் பசில் ராஜபகஷ தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படும் சட்டத்திட்டங்களுக்கு அமைய அரச நிருவாக அமைச்சின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் பணிபுரிய இவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு இணைத்துக் கொள்ளப்படும் பட்டதாரிகளின் கடமைகள் தொடர்பில் மாவட்ட ஏற்பாட்டு பணிப்பாளர்கள் மற்றும் உதவி பணிப்பாளர்களை அறிவுறுத்த இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ நிறுவனத்தில் இடம்பெற்ற செயலமர்வில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் பட்டதாரிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களுக்காகவும், நாட்டின் அபிவிருத்தி பயணத்திற்கும் பங்களிப்பை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனவும் அது மாத்திரமமல்லாமல் இப்பட்டதாரிகள் மக்களுடைய கருத்துக்களை அரச தரப்பிற்கு கொண்டு செல்லும் பணியை நிறைவேற்றும் அடிப்படையில் பணியாற்ற வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment