Wednesday, August 15, 2012

பஸ் நிலையத்தில் நின்ற 14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இருவர் கைது.

கொழும்பு-புறக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்ற 14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய தனியார் பஸ்நிலைய நடைபாதை வியாபாரிகள் இருவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பதுளையை சேர்ந்த குறித்த சிறுமி, கொழும்பிலுள்ள தனது தாயைத்தேடி தனியாக கொழும்புக்கு வந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த சிறுமி தனியாக நிற்பதை அவதானித்த புறக்கோட்டை நடைபாதை வியாபாரிகளான சந்திரமோகன், ஸ்ரீதரன் ஆகியோர் சிறுமிடம் சென்று அங்கு நிற்பதற்கான காரணத்தை விசாரித்துள்ளனர். அதன்பின்னர் சிறுமியின் தாயிடம் அழைத்து செல்வதாககூறி சிறுமியை கல்கிசையிலுள்ள தனிமையான ஒரு வீட்டுக்கு கொண்டு சென்று மறுநாள் காலை வரை குறித்த சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக புறக்கோட்டை குற்றப் புலனாய்வுப் பொறுப்பதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு நபர்களுடன் சேர்ந்து சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மற்றுமொரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்திரமோகன், ஸ்ரீதரன் அகிய இரண்டு சந்தேக நபர்களையும் அணிவகுப்பில் சரியாக அடையாளம் காட்டியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்த நீதவான் சந்தேக நபர்களை தொடரந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment