Friday, August 17, 2012

13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைகிறது இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்து ள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் யோசனைக்கு இணங்க இந்த நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும், இதற்கிணங்க கேளதமாலா, சூரினேம், பெலிசி, ஹொன்டுராஸ், ஹெய்ட்டி, சென்ட் கிற்ஸ் என்ட் நேவஸ்,சென்ட் லூசியா, மற்றும் சென்ட் வின்சன்ட் என்ட் த கிரெநெடைன்ஸ் ஆகிய 13 நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment