Friday, August 24, 2012

பாக்கிஸ்தானுள் நுழைந்து அமெரிக்க சிஐஏ விமானங்கள் தாக்குதல். 12 தீவிரவாதிகள் பலி.

பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் அமெரிக்க உளவுப்படை விமானம் நடத்திய திடீர் தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இப்பகுதியில் இன்று சிஐஏ அமைப்பின் 6 விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன. தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடம் மற்றும் அப்பகுதியில் உள்ள வாகனம் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்தப் பகுதியை உளவு விமானங்கள் தாக்குவதற்கு ஆயத்தமாக உள்ளன என்றும் முன்னறிவிப்பின்றி அமெரிக்க உளவு விமானங்கள் தாக்குதல் நடத்துவது சட்டவிரோதம் என்றும் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் அமெரிக்க தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அதற்கு அடுத்த நாளே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 18ம் தேதி நடந்த தாக்குதலில் 20 தீவிரவாதிகளும், 19ம் தேதி 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பெரும்பாலான தாக்குதல் ஷாவாலா பகுதியில் நடந்துள்ளது.

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தாலிபான், அல்-கொய்தா தீவிரவாதிகளை அழிக்கும்படி பாகிஸ்தானை தொடர்ந்து அமெரிக்க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment