முஸ்லிம் தீவிரவாதிகளின் கடத்தலுக்கு பயந்து 100 இந்துக்குடும்பங்கள் குடிபெயர்ந்தது.
பாகிஸ்தானில் பலுசிஸ்தான், சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள ஐகோபாபாத், ருஷ்தார், ஆஸ்டா முகமது உள்ளிட்ட இடங்களில் இந்துக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இங்கு பல 100 ஆண்டுகளாக இவர்கள் தங்கியுள்ளனர். ஆனால், இவர்களுக்கு அங்குள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்.
வர்த்தக பிரமுகர்கள் மற்றும் பெண்களை கடத்தி பணம் பறித்தல் மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் சிந்து மாகாணத்தில் ஐகோபாபாத் என்ற இடத்தில் மனீஷா குமாரி என்ற 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பின் மீட்கப்பட்டாள். இது போன்ற சம்பவங்கள் அங்கு வாழும் இந்துக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்கிருந்த 100 இந்து குடும்பங்கள் வெளியேறி இந்தியாவுக்கு குடி பெயர்ந்தனர். அக் குடும்பங்களை சேர்ந்த 500 பேர் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் வர்த்தகங்களை கைவிட்டனர். சொத்துக்களையும் விட்டு வந்துள்ளனர். இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத் குயம் அலி ஷா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து குடி பெயர்ந்துள்ள இந்துக்களுக்கு இந்தியா விசா கொடுத்துள்ளதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான காரணத்தை சரிவர விசாரிக்காமல் இந்திய தூதரகம் அவர்களுக்கு விசா அளித்துள்ளது என உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment