10%ஆசனங்கள் போதுமாம் – பெண் பா. உ
அரசியல் மன்றங்களில் தெரிவு செய்யப்படுபவர்களில் 30%மானோர் பெண்களாக இருக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமறன்றத் தெரிவுக் குழுவில் தான் விரும்பிய போதிலும், பெண்களுக்கு 10% போதுமானது என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தது தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாக சிரேட்ட அமைச்சர் பேரா. திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தென்னக்கும்புரையிலுள்ள றீஜென்சி ஓட்டலில் இடம் பெற்ற "அமைதி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியில் இலங்கைப் பெண்கள்" என்ற ஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனை ஆவன செய்வதற்காக ஜனாதிபதியிடம் கையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நேபல் பரிசு பெற்றவரான முன்னாள் லைபீரிய ஜனாதிபதி லெக்மா கோவி, அமைச்சர் சுதர்மா ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க, போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பின் தலைவி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment