Tuesday, August 14, 2012

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு 1 மணி நேரத்தில் செல்லும் விரைவு விமானம்:

இன்று சோதனை ஓட்டம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1 மணி நேரத்தில் விமானத்தில் செல்ல முடியுமா? என்ற கேள்வி எழும். அந்த கேள்விக்கு முடியும் என பதில் சொல்லும் வகையில் அதிவேக சக்தி கொண்ட விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள மொஜாவ் பாலைவனத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானபடை தளத்தில் அமெரிக்க ராணுவம் இந்த விமானத்தை தயாரித்துள்ளது. இது வினாடிக்கு 4,500 மைல் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. அதில் பி-52 குண்டு வீசும் விமானத்தின் இறக்கை பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கு எக்ஸ்-51 ஏ ‘வேவ் டைரர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது சுமார் ரூ. 1893 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது. பசிபிக் கடலின் மேல் சுமார் 50 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சோதனை வெற்றி பெற்றால் விமான வரலாற்றில் இது புதிய மைல் கல் ஆக கருதப்படும்.

1 comments :

Arya ,  August 17, 2012 at 3:52 AM  

Its failed and X-51A had falled in pacific ocean after 30 seconds of start.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com