பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் 06 பேர் பலி - நிந்தவூரில் சம்பவம்
நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில், அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும், அக்கரைப்பற்று நோக்கிச்சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த 06 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த சிறுவனொருவன் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர்களில் மூன்று பெண்கள், ஒரு சிறுவன் , ஒரு சிறுமி மற்றும் முச்சக்கர வண்டிச்சாரதி ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment