05 இலட்சம் வேடுவர்கள் உள்ளோம், அமைப்பை உருவாக்கிப் போராடுவோம் – வன்னிலத்தோ.
ஆதிவாசி இளைஞர்களைக் கொண்டு தான் நடாத்திய கணக்கெடுப்பின் படி இலங்கையில் ஐந்து இலட்சம் ஆதிவாசிகள் இருப்பதாகவும் அவர்கள் யாவரையும் ஒன்றுபடுத்தி அமைப்பொன்றை உருவாக்கப் போவதாகவும் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலாத்தோ கூறுகின்றார்.
அந்த அமைப்பின் ஊடாக ஆதிவாசிகளின் உரிமை தொடர்பான தீர்மானம் எடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 08 ம் திகதி தம்பனையில் நடைபெறும் கோத்திர சபையானது ஆதிவாசி வரலாற்றில் பரந்த கோத்திர சபையாகும் என்பதுடன், அந்த சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கைளிக்கப்படுமென்றும் கூறும் ஆதிவாசித் தலைவர் அவற்றை நிறைவேற்ற ஜனாதிபதி ஆவன செய்வார் என்று தான் நம்புவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்ற பிள்ளையான் எனப்படுகின்ற சந்திரகாந்தன், தான் வேடுவர் இனத்தை சேர்ந்தவன் எனக்குறிப்பிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. தற்போது வேடுவர் தலைவர் இயக்கம் அமைக்கப்போகின்றேன் என மிரட்டுகின்றார். பிள்ளையான் தலைவருக்கு இவ்வாறானதோர் ஆலாசனையை வழங்கினாரா என பலரும் கையை பிசைகின்றனர்..
0 comments :
Post a Comment