Wednesday, July 18, 2012

கிளிநொச்சியில் அமைக்கப்படும் நவீன சந்தையில் புதிய கொட்டகைகள். TNA , EPDP இடையே முறுகல்.

எப்படா நீ கிளிநொச்சி வந்த நீ? கேட்கிறார் த.தே.கூ பிரதேச சபைத் தலைவர் வர்த்தக சங்கத் தலைவரிடம்.

கிளிநொச்சி நவீன பொதுச்சந்தை பிரதமர் டி.எம்.ஜயரட்ண அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கிளிநொச்சி டிப்போச்சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகிறது இதற்காக அரசு 275 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்து அதில் முதற்கட்டமாக 70 மில்லியன் ரூபா நிதியினை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கி அவர்கள் ஊடாக கட்டுமானப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் விரைவில் புதிய சந்தை கட்டிடத்தொகுதிக்குள் மரக்கறி, மீன், பழக்கடைகள் கொண்டுவரப்ட உள்ளதோடு ஏனைய கடைகளையும் தற்காலிகமாக புதிய சந்தைதொகுதிக்குள் தற்காலிக கொட்டகைகளை அமைத்து வியாபாரங்களை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு சந்தை வர்த்தக சங்கத்தலைவர் இரத்தினமணி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்
இக்கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஜக்சீல் அவர்களுடன் தொடர்பு கொண்டு புதிய சந்தைதொகுதியில் இனி மேற்கொள்ளபடவுள்ள கட்டுமானப்பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்கு தொழிநுட்ப உத்தியோகத்தரின் மாதிரி வரைப்படத்தினை பெற்று நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார் அத்தோடு அதனை வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஆடி மாதம் பிறப்பதற்கு முன்னர் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக கிளிநொச்சி பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஜக்சீல் தொழிநுட்ப உத்தியோகத்தர் சுரேன் அவர்களின் மாதிரி வரைபடத்தினை பெற்று கடந்த 15-07-2012 அன்று சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் தற்காலிக கொட்டகை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த 15-07-2012 அன்று காலை 08.40 முதல் 10.40 வரையான நேரத்தில் அடிக்கல் நாட்டுவதற்கு  சந்தை வர்த்தகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வேளையில் அங்கு வருகை தந்த கரைச்சி பிரதேச சபையின் தலைவர் குகராசா  அவர்களும் அவரது கட்சி உறுப்பினர்கள் மற்றும் சகாக்களுடன் தானும் ஒரு வரைபடத்துடன் வருகைதந்து அதன்படி தற்காலிக கொட்டகைகளை அமைக்கவேண்டும் வற்புருத்தியுள்ளாhர் இதன்போது அவ்வரைபடத்தினை பார்வையிட்ட சந்தை வர்த்தக சங்கத் தலைவர் அந்த வரைபடத்தில் ஒரு பகுதியில் 12 கடைகள் காணப்படுவதாகவும் ஆனால் அந்த இடத்தில் 14 கடைகள் வரவேண்டும் எனவும் கூறிய அவர் பாதிக்கப்பட்டு அனைத்தினையும் இழந்து கடன்களுக்கு மத்தியில் வியாபாரம் செய்து வரும் வர்த்தகர்கள் பாதிக்கப்பட கூடாது எனவும் எனவே பதினான்கு கடைகளை கொண்ட தொகுதிகளாக அடிக்கல் நாட்டுவதே பொருத்தமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தகர்களின் நலன்களை மட்டும் கருத்தில் எடுத்து அதில் உறுதியாக இருந்த வர்த்தக சங்கதலைவர் தனது கருத்திற்கு மதிப்புக்கொடுக்க வில்லை என்பதால் நீர் யார் எனக்கு சொல்வதற்கு? நீர் எப்பொழுது கிளிநொச்சிக்கு வந்தாய்? தோட்டக்காட்டானுக்கு இவ்வளவு என்றால் எனக்கு எவ்வளவு இருக்கும்? என  தனது வழமையான இனத்துவேச வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கின்றார் கரைச்சி பிரதேச சபை தலைவர் குகராசா (இவர் முன்னர் ஒரு முறை தனது பிரதேச சபை எதிர்கட்சி உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்களை ஒட்டுக்குழு உறுப்பினர் என கூறியிருந்தார்) இந்நிலையில் பதிலுக்கு சந்தை வர்த்தக சங்க தலைவரும் பிரதேச சபை தலைவருடன் இனத்துவேசமாக பேசியது எதிராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

பின்னர் நிலைமைகள் சுமூகமாக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது  ஆனால் இங்கு கரைச்சி பிரதேச சபை தலைவர் குகராசா அவர்களின் மிகவும் கேவலமான நடவடிக்கைகள் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது 1974 ஆண்டு கிளிநொச்சிக்கு வந்த குகராசா அவர்கள் 1977 ஆண்டு கிளிநொச்சிக்கு வந்த இரத்தினமணி அவர்களை பார்த்து நீர் எப்பொழுது கிளிநொச்சிக்கு வந்தாய் எனக் கேட்பது இவர் வடக்கு வாழ் மலையக மக்களை எப்பொழுதும் இரண்டாம் தர மக்களாக பார்ப்பதன் வெளிப்பாடே தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக அந்த மக்களிடம் செல்லும் இவர் எப்பொழுதும் சாதிவாதம் இனவாதம் போன்ற பிற்போக்குதனங்களுக்கு மூழ்கியிருக்கும் பிற்போக்குவாதி காலததிற்கு காலம் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்த இவர் தமிழர் அகதிகள் புனர்வாழ்வு கழகத்தில் வேலை செய்த காலங்களில் அங்கு மேற்கொண்ட ஊழல் மோசடி காரணமாக விடுதலைப்புலிகளால் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டபோது புலிகளை கடுமையாக விமர்சிப்பவராக மாறியிருந்தார்.

தீவிர இடதுசாரியாக இருந்த இவர் வட்டுக்கோட்டைத் தனி தமிழீழ தீர்மானத்தினை முழு தமிழ் மக்களும் ஆதரித்த காலத்தில் தந்தை செல்வாவின் போஸ்டர்களுக்கு கிளிநொச்சியில் சாணி எறிந்தவர் ஆனால் தற்பொழுது கேவலம் ஒரு பிரதேச சபை தலைவர் பதவிக்காக தன்னை ஒரு தமிழ்த்தேசியவாதியாக காட்டிக்கொண்டு திரிகின்றார்
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுடன் சேர்ந்து தீவிர தமிழ்த்தேசியம் பேசும் இவர் அவரை போன்று யுத்தகாலததில் கிளிநொச்சியிலிருந்து தப்பி ஓடி பாதுகாப்பாக தனது குடும்பத்தினருடன் வாழ்ந்தவர். தனது இரு பிள்ளைகளையும் யுத்தத்தின் சிறு வடுவைக்கூட சுமக்கவிடாது படிப்பித்து வருகின்ற இவர் 1977 ஆம் ஆண்டு முதல் கிளிநொச்சியிலேயே வாழும் சந்தை வர்த்தக சங்க தலைவரை பார்த்து மேற்படி கேட்டிருப்பது கேலிக்குரியது.

இரத்தினமணி அவர்களின் ஒரு மகன் போராளியாக இருந்து தனது ஒரு காலையும் இழந்திருக்கின்றார் ஒன்றரை வருடங்களாக வவுனியா பட்டாணிச்சூர் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தற்பொழுது விடுதலையாகி வந்துள்ளார். அதேவேளை மற்றொரு மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் பூசா முகாமில் இருந்து தற்பொழுது விடுதலையாகியுள்ளார். இரத்தினமணி அவர்கள் இறுதி யுத்தத்தில் தனது       வியாபாரத்தை இழந்து முள்ளிவாய்க்கால் வரை சென்று அங்கிருந்து மெனிக்பாம் அருணாசலம் முகாமுக்குச் சென்று மீள்குடியேறியவர்.

ஆனால் குகராசா அவர்களுக்கு இதில் எதுவுமே தெரியாது, அருணாசலம் முகாமை கேள்விப்பட்டிருப்பாரோ தெரியாது, இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுடன் சேர்ந்து இரத்தினமணி அவர்கள் ஒரு வேளை உணவுக்காக தவித்த போது மூன்று வேளைக்கு நான்கு வேளை உண்டு வவுனியாவில் பாதுகாப்பாக வாழ்ந்தவர்தான் பிரதேச சபை தலைவர் குகராசா. இவருக்கு மல்ரிபரல் தெரியாது கொத்துக் குண்டு தெரியாது ஏன் இறுதியுத்ததில் ஒரு தோட்டா சத்ததை கூட கேட்டிருகாதவர் இவை அனைத்தையும் அனுவித்து வந்த இரத்தினமணி அவர்களை பார்த்து எப்படி நீர் யார் என கேட்க முடியும் அதற்கு அவருக்கு என்ன தகுதி உண்டு தனது நலனுக்காக அன்று விடுதலைப்புலிகளை எதிர்த்த இவர்  இன்று தனது சுயநல அரசியலுக்காக விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக காட்டிக்கொள்ளும் குகராசா அவர்கள் அதற்காக ஒரு சிறு கீறலின் வலியை கூட அனுபவிக்காதவர்.

எனவே மற்றவர்களின் முதுகில் உள்ள அழுக்கை பார்த்து விமர்சிக்கும் இவர்கள் முதலில் தங்களது முதுகில் உள்ள அழுக்கை அகற்ற வேண்டும் மற்றவர்களை பார்த்து கேள்வி எழுப்பும் குகராசா போன்றோர் அதற்கான தகுதி தங்களிடம் உள்ளதா என்பதனை பரிசிலீத்துக்கொள்ளவேண்டும் வெள்ளை ஆடை மட்டும் போதாது முதலில் உள்ளங்களை வெள்ளையாக வைத்துக்கொள்ளவேண்டும் மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள காட்டும் அக்கறையினை அவர்களின் வாழ்கையின் முன்னேற்றத்திலும் காட்டவேண்டும் அல்லது குறைந்த பட்சம் அவர்களை இரண்டாம் தர மக்களாக நடத்துவதனை கைவிடவேண்டும்

தங்கவேலு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com