பொலிஸ்கான்ஸ்டபிளின் முகத்தில் மயக்கமருந்தை தெளித்து T56 அபகரிப்பு.
வரக்காபொலை மெஜஸ்ரேட் நீதிமன்ற த்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்ட்டபிள் வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அபகரித்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபலின் முகத்தில் இரசாயன பாதார்த்தமொன்றை விசிறிவிட்டு துப்பாக்கியை அபகரித்துள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபலுடன் இருந்த ஊர்காவல் படை வீரர் அருகிலுள்ள கிணற்றுக்கு நீர் எடுக்கச்சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வரக்காபொலை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தர்மரத்ன என்பவரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இவர் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியை அபகரித்தவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மங்கெதர ஹுணுவல பகுதியில் கைவிடப்பட்டிருந்த போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வரக்காபொலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னறனர்...
0 comments :
Post a Comment