SLFA வேட்பாளர்களை தெரிவு செய்ய நேர்முக பரீட்சை நாளை மறுதினம்- மைத்திரிபால சிறிசேன
கலைக்கப்பட்ட 3 மாகாண சபைக்குமான தேர்தலில் தகுதியும், திறமையும், மிக்க வேட்பாளர்களை முன்னிறுத்துவதற்காக வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முக பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது என, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலில் கிராமிய இளைஞர் யுவதிகளை அதிகளவில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாதெனவும், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்யும் போது, உரிய தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment