Wednesday, July 11, 2012

அமெரிக்க ஈரானிய மோதல் ஆபத்தான புதிய கட்டத்தில் நுழைகிறது! Peter Symonds

ஈரானின் அணுசக்தித் திட்டங்களை குறித்து எழுத்துள்ள அமெரிக்க தலைமையிலான ஈரானுடனான மோதல் ஓர் ஆபத்தான புதிய கட்டத்தை அடைந்துள்ளது; சர்வதேசப் பேச்சுக்களில் தேக்கம், ஈரான் மீது அதன் பொருளாதாரத்தை முடக்குவதற்குப் புதிய பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட்டிருப்பது இவற்றை அடுத்து இந்நிலை வந்துள்ளது. தெஹ்ரான் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணியவில்லையெனில், இராணுவத் தாக்குதல் உட்பட அனைத்து விருப்புரிமைகளும் மேசையில் உள்ளன என்று பலமுறை ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸிடம் கூறுகையில், அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே பாரசீக வளைகுடாவில் கப்பல் பாதைகளைத் திறந்து வைத்திருத்தல் என்னும் மறைப்பில் நடக்கும் இராணுவத் தயாரிப்புக்கள் குறித்து விவரித்தனர். இரண்டு விமானந்தாங்கி கப்பல்களான USS Lincoln, USS Enterprise ஆகியவை இப்பகுதியில் அவற்றுடன் இணைந்த போர்ப்பிரிவுகளுடன் நிலைகொண்டுள்ளன. அமெரிக்க இராணுவம் வளைகுடாப் பகுதியில் இருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் கப்பல்களின் எண்ணிக்கையை இரு மடங்காக்கிவிட்டது. அமெரிக்க விமானப் படை தன் நிலைப்பாட்டை F-22 Stealth bombers, F-15C விமானப் போர்கள்மூலம் அதிகரித்துள்ளது.

USS Ponce என்னும் ஒரு மிதக்கும் செயற்பாடுகள் அரங்கை பென்டகன் வளைகுடாவில் நிறுத்தியுள்ளது. இது பலவற்றிற்கும் பயன்படுத்தப்படலாம். சர்வதேச நீர்நிலைகளில் இந்த அரங்கு நிறுத்தப்பட்டுள்ளதால், அமெரிக்கத் துருப்புக்கள் தங்கள் செயற்பாடுகளை பிராந்திய அரசாங்கங்களுடன் அவற்றின் தளங்களைப் பயன்படுத்தவது குறித்து ஆலோசிக்கத் தேவையில்லாமல் ஈரானுக்குள் எந்த செயற்பாடுகளையும் மேற்கோள்ளலாம்

ஒரு மூத்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரி டைம்ஸிடம் பின்வருமாறு கூறினார்: “இது ஈரானிய அணுச்சக்தி நோக்கங்களை மட்டும் கருத்திற்கொள்ளவில்லை. ஈரானின் பிராந்திய மேலாதிக்க முனைவுகளைப் பற்றியும் கருத்திற்கொண்டுள்ளது. நம் நட்புநாடுகள், பங்காளிகள், நண்பர்கள் அனைவருக்கும் அமெரிக்கா ஆசியாவில் முன்னிலைக்கு நகர்கையில், நாம் மத்திய கிழக்கிலும் பெரும் எச்சரிக்கையுடன் உள்ளோம் என்பதற்கான சிக்கல் வாய்ந்த அமெரிக்க இராணுவத்தின் சக்தி குறித்த ஒரு நிரூபணம் ஆகும்.”

இக்கருத்துக்கள் ஈரானின் அணுசக்தி பற்றிய ஆதாரமற்ற அமெரிக்கக் கூற்றுக்களின் உண்மையை எடுத்துகாட்டுவதுடன் அவை எப்படி எரிசக்தி செழிப்புடைய மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றில் அமெரிக்க மேலாதிக்கத்தை விரிவாக்கும் பொறுப்பற்ற கொள்கையின் விரிவாக்கம் பற்றிய ஒரு போலிக்காரணமும் ஆகும். ஈரானிய ஆட்சியை வாஷிங்டன் இந்த நோக்கங்களுக்கு ஒரு பெரிய தடை எனக் கருதுகிறது.

ஆசியாவில் முன்னிலை என்ற குறிப்பு—அதாவது ஒபாமா நிர்வாகம் சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்காக எடுத்துள்ள அதிகரித்துள்ள இராஜதந்திர மற்றும் இராணுவ முயற்சிகள் அடித்தளத்தில் உள்ள மூலோபாயத்தைச் சுட்டிக் காட்டுகிறது. தன் போட்டியாளர்களுக்குச் செல்லும் எரிசக்தி விநியோகங்கள்—குறிப்பாகச் சீனாவிற்குச் செல்லுபவற்றை—கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா இலக்கு கொண்டுள்ளது. அதற்காக மத்திய கிழக்கு முழுவதும் தன் மூலோபாய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும், தென்கிழக்கு ஆசியாவிற்கூடாக சீனத் துறைமுகங்களுக்குச் செல்லும் முக்கிய கப்பல் பாதைகளையும் கட்டுப்படுத்த விரும்புகிறது.

இப்பொழுது ஒபாமா நிர்வாகம் இறுதி விளையாட்டான ஈரான் மீது ஒரு மோதலுக்குசெல்லும் மூலோபாயத்தை அடைந்துவிட்டது. இது அவர் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே தயாரிப்பிற்கு வந்திருந்தது. “இனிப்பை காட்டுவதும் மற்றும் அச்சுறுத்துவதும்” என்ற அணுகுமுறை கணிசமான விவரங்களுடன் செப்டம்பர் 2008லேயே இயற்றப்பட்டன. இது இருகட்சிகளின் கொள்கை மையத்தால் தயாரிக்கப்பட்டது. அதை இயற்றியவர்களுள் ஈரான் பற்றிய ஒபாமாவின் உயர்மட்ட ஆலோசகராக வந்துள்ள டெனிஸ் ரோஸும் அடங்குவார். ஈரானை அமெரிக்காவின் மட்டுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு ஊக்கம்கொடுப்பது பொருளாதாரத் தடைகள் விரிவுபடுத்தப்படுதல், இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்னும் அச்சுறுத்தல்களுடன் ஆதரவளிக்கப்படுகின்றன.

ஒபாமாவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு ஈரானிய ஆட்சியுடன் உண்மையான பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்ற இலக்கை கொண்டிருக்கவில்லை. மாறாக இவை புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளால் அந்நியப்பட்டிருந்த ஐரோப்பிய நட்பு நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ள கூறப்பட்டவையாகும். பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றின் ஆதரவுடன் ஒபாமா ஈரானில் ஜூன் 2009 ல் ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு, அதற்காக மத்தியதர வகுப்பு எதிர்ப்பு “பசுமை” இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்து, ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜட் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அகற்ற முயன்றதாகும்.

ஈரானுக்கும் P5+1 (அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி) க்கும் இடையே கடந்த மாதம் மாஸ்கோவில் நடந்த பேச்சுக்கள் கிட்டத்தட்ட முறிந்து விட்டன. யுரேனிய அடர்த்தித்திட்டத்தை அது 20%க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்னும் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த எச்சரிக்கையை ஈரான் ஏற்க மறுத்தது. அதேபோல் அதனிடத்தில் இருக்கும் இப்பொருளின் தொகுப்பை நாட்டை விட்டு அகற்ற வேண்டும், அதன் போர்டோ அடர்த்தி ஆலையை மூடவேண்டும் ஆகிய கருத்துக்களையும் மறுத்துவிட்டது. ஒரு ஆழமான சோதனைகளுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான கோரிக்கை யுரேனிய அடர்த்தியை நிறுத்துவதற்கான முதல்கட்டம்தான் என்பதையும் தெஹ்ரான் நன்கு அறியும். மேலும் குறைந்தப்பட்ச தொழில்நுட்பப் பேச்சுக்கள் இந்த வாரம் இஸ்தால்புல்லில் நடைபெற்றன. ஆனால் புதிய விவாதங்களுக்கு திகதி ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை.

நல்லெண்ணத்துடன் ஒபாமா நிர்வாகம் ஈரானுடன் ஒரு போதும் பேச்சுக்களை நடத்தியதில்லை. ஜூலை 1 வரவிருக்கும் புதிய அமெரிக்க, ஐரோப்பியப் பொருளாதாரத் தடைகளை நிறுத்த அல்லது தாமதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளைக்கூடப் பரிசீலிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ஈரானிய எண்ணெய் இறக்குமதிகள் மீது தடை என்பது ஞாயிறன்று நடைமுறைக்கு வந்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானின் மத்திய வங்கியுடன் வணிகத் தொடர்பு கொண்டால் அபராதம் என்னும் அமெரிக்கச் சட்டத்துடன் இணைந்து இதுவும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதிகள் ஏற்கனவே 40% சரிந்துவிட்டன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பாரிய துன்பங்களை உழைக்கும் மக்களுக்குக் கொடுத்துள்ளது.

இப்பொழுது வாஷிங்டன் கிட்டத்தட்ட அனைத்து “இராஜதந்திர விருப்புரிமையையும்” பயன்படுத்தி தீர்த்துவிட்டது என்பதுடன், புதிதான ஈரான் மீது பொருளாதாரத் தடை என்று சொல்லக்கூடிய செயற்பாடுகளையும் சுமத்தியுள்ளது. இதுவே ஒரு போர் நடவடிக்கை ஆகும். அடுத்தபடி இராணுவ நடவடிக்கைதான். 2008 இருகட்சிக் கொள்கை மத்திய அறிக்கை கோடிட்டுக் காட்டியதுபோல், “ஒரு இராணுவத் தாக்குதல் இயலக்கூடிய விருப்புரிமை என்பதை நாங்கள் நம்புகிறோம், ஆனால் ஈரானின் அணுவாயுதத் திட்டத்தைத் தாமதப்படுத்த அது கடைசிப்பட்ச செயலாகத்தால் இருக்க வேண்டும்.” இந்த அறிக்கை அமெரிக்க இராணுவத் தாக்குதல் “ஈரானின் அணுச்சக்தி உள்கட்டுமானத்தை மட்டும் இலக்கு கொள்ளக்கூடாது, மரபார்ந்த இராணுவ உள்கட்டுமானத்தையும் இலக்கு கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் ஈரானிய எதிர்கொள்ளலை நசுக்க முடியும்.” எனக்குறிப்பிட்டது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின், வளைகுடாவில் பென்டகனின் ஆரம்ப போர் முயற்சிகள் இத்திட்டங்களைச் செயல்படுத்தும் இராணுவத்தின் தகமையை நிறுவியுள்ளன. ஒபாமா நிர்வாகம் மிகப்பெரிய அமெரிக்க இஸ்ரேலியக் கூட்டுப் போர் பயிற்சிகளை அக்டோபர் அல்லது நவம்பரில் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ள அறிக்கை மூலம் பிராந்திய அழுத்தங்களை விரிவாக்கியுள்ளது. அப்போர் விளையாட்டுக்கள் ஏவுகணைப் பாதுகாப்பு முறைகளைச் சோதிக்கும் வகையில் இருக்கும். அமெரிக்கா முக்கிய கண்ணி வெடி அகற்றும் பயிற்சியை 19 நாடுகளுடன் சேர்ந்து கொண்டு பாரசீக வளைகுடாவில் செப்டம்பர் மாதம் நடத்தும் என்று நியூ யோர்க் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது. ஈரானின் பிராந்தியப் போட்டி நாடுகளான சவுதி அரேபியா மற்றைய வளைகுடா நாடுகளுடன் இராணுவ உறவுகளை விரிவாக்கும் பிற திட்டங்களையும் வாஷிங்டன் கொண்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகள், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானின் நட்பு நாடான சிரியாவில் ஜனாதிபதி பஷிர் அல் அசாத்தின் ஆட்சியை மாற்றுவதற்கான இராணுவத் தாக்குதல்கள் அச்சுறுத்தலுடன் சேர்ந்து கொண்டு மத்திய கிழக்கை ஆபத்தான வெடிமருந்துக் கிடங்காக மாற்றியுள்ளது. உடனடியாக ஒபாமா நிர்வாகத்தின் நோக்கங்கள் எப்படி இருந்தாலும், எத்தகைய தவறான இராணுவத் தப்புக் கணக்குகளோ, நிகழ்ச்சியோ ஒரு போருக்குத் ஆரம்பக்கட்டம் ஆகிவிடும். அது விரைவில் ஒரு பிராந்திய மோதலாகக் கொந்தளித்து பெரும் நாடுகளையும் ஈர்க்கக்கூடும்.

போர் ஆபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் திறனுடைய ஒரே சமூகச் சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். அதாவது போருக்கான மூலகாரணமான முதலாளித்துவத்தையும், அது உலகை போட்டி தேசிய அரசுகளாக பிரித்திருப்பதையும் அகற்றவதின் மூலம் செய்யப்படமுடியும். பிராந்தியத்தில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கொள்ளை முறை நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா, சர்வதேசரீதியாக இருக்கும் தங்கள் வர்க்க சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து, சோசலிச சர்வதேசியம் என்பதற்கான ஒரு இணைந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com