பேஸ் புக் தொடர்பில் அறிமுகமில்லாதவர் வழங்கும் எந்த links ஜயும் அழுத்த வேண்டாம். சந்திரகுப்தா
இலங்கையில் கடந்த ஐந்து மாதத்தில் 350 சட்டவிரோத செயற்பாடுகள்.
இலங்கையில பேஸ் புக் தொடர்பில் கடந்த ஐந்து மாதத்தில் 350 க்கும் மேற்பட்ட சட்ட விரோதமான செயற்பாடுகள் பற்றிய முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாக SLCERT(Sri Lanka Computer Emergency Response Team)குழுவின் ஊடக பேச்சாளரான ரொசான் சந்திரகுப்தா ஐலன்ட் இதழுக்குத் தெரிவித்துள்ளார்.
2011 ல் இந்த எண்ணிக்கை 1400 ஐத் தாண்டிருந்தது என்றும், பெரும்பாலான முறைப்பாடுகள் போலியான பேஸ் புக் கணக்குகள்,Password திருட்டு என்பன பற்றியதாகும். பணம் பறித்தல் மற்றும் வேறு சட்டமுரணான செயல்களுக்காக மற்றவர்களின் Password டை பயன்படுத்த முயற்சித்தல் என்பன தொடர்பாகவே பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்தார்.
எனவே எந்த விதமான கவர்ச்சிகரமான படங்கள், மற்றும் செய்திகளுடன் வரும் வேண்டுகோள்களில் மயங்கிவிட வேண்டாம் என்றும், அறிமுகமில்லாதவர் வழங்கும் எந்த links ஜயும் அழுத்த வேண்டாம் என்றும் திரு குப்தா எச்சரிக்கின்றார்.
அத்துடன், கணினித் தகவல் திருடர்கள் ஒருவரின் பேஸ் புக் கணக்கில் நுழைந்தவுடன் அதில் அவர்கள் கணக்கின் உரிமையாளரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எதையும் செய்யத் துணிந்து விடுவார்கள். பணம் பறிக்கும் நோக்குடன் அவர்கள் பல்வேறு தொழில் நுட்பங்களைக் கையாள்கின்றார்கள். போலி கணக்குகளை உருவாக்குவதும் யாதேனும் ஒருவரின் கணினித் தகவலை திருடுவதும் 2006ம் ஆண்டு கணினிக் குற்றங்கள் சட்டத்தை மீறும் செயலாகும். முறைப்பாடுகள் கிடைத்தவுடன போலி கணக்கைப் பற்றி ஆய்ந்து அதை SLCERT செயலிழக்கச் செய்து விடுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அவர்களை CID யை அணுகச் செய்வோம் என்று மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment