இணையம் (Internet) ஒரு அடிப்படை உரிமை – ஐ. நா.
இணையம் (Internet) ஒரு அடிப்படை உரிமை என்று 47 நாடுகளைக் கொண்ட ஐநா வின் மனித உரிமைச் சபை பிரகடனம் செய்துள்ளது. மக்கள் தமது பேச்சுச் சுதந்திரதை இணையத்தில் பயன்படுத்த உரிமையுள்ளவர்கள் என்று அது தெரிவித்துள்ளது. அவ்வாறு மனிதவுரிமைகள் சபை இணையத்தின் மக்கள் உரிமையை விரிவுபடுத்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். சபையில் உறுப்புரிமை வகிக்கும் இணையத்தை தணிக்கை செய்யும் நாடுகள் உட்பட எல்லா நாடுகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளன.
“ ஓவ்லைனில் மக்கள் கொண்டுள்ள அதே உரிமை ஒன்லைனிலும் மக்களுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும், ஐக்கிய நாடுகள மனித உரிமைப் பிரகடனத்தின் 19 வது பிரிவுக்கு அமைவான குறிப்பாக தான் விரும்பிய யாதேனும் ஊடகத்தின் ஊடான நாட்டெல்லை வேறுபாடற்ற பேச்சுச் சுதந்திரத்திற்கும் அது பொருந்தும் “ என்று அந்த பிரகடனம் கூறுகின்றது. இணையத்தினைப் பயன்படுத்தும் வசதிகளை மேமடபடுத்துமாற் அது சகல நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment