பொலிஸ் உயர் அதிகாரியை தாக்கி அவரின் மூன்று பற்களை உடைத்த விமானப்படை சிப்பாய் கைது
பிரதான பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு, பொலிஸ் அதிகாரியின் மூன்று பற்கள் உடைத்த விமானப்படை சிப்பாயை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, கட்டுகஸ்தொட்ட - நிட்டவெல மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற றகர் விளையாட்டுப் போட்டியை பார்வையிட ஒருவர் அனுமதிச் சீட்டு இல்லாமல் மைதானத்திற்குள் செல்ல முயற்சித்துள்ளார். அதன்போது குறித்த நபர் மைதான பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த இடத்திற்குச் சென்ற பிரதான பொலிஸ் அதிகாரி, குறித்த நபரிடம் விசாரணை செய்தபோது, குறித்த நபர் பிரதான பொலிஸ் அதிகாரியை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் பிரதான பொலிஸ் அதிகாரியின் மூன்று பற்கள் கழன்று விழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் குண்டசாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் கொழும்பில் விமானப்படை முகாம் ஒன்றில் பணிபுரியும் விமானப்படை சிப்பாய் என தெரிவித்த பொலிஸார், குறித்த விமானப்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment