ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபராக வாய்ப்பு அதிகம்: கருத்துக்கணிப்பு முடிவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் மிட்ரோம்னி போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரோம்னி ஒபாமா அரசைத் தாக்கிப் பேசுவதும், ஒபாமா ரோம்னியின் கொள்கைகளை தாக்கிப் பேசுவதும் சாதாரணமாகிவிட்டது.
இந்நிலையில் அதிபர் தேர்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் 50 சதவீதம் பேர் ஒபாமாவுக்கும், 43 சதவீதம் பேர் ரோம்னிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரச்சனையில் இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை யார் சரி செய்வார் என்று கேட்டதற்கு ஒபாமாவால் தான் முடியும் என்று 48 சதவீதம் பேரும், ரோம்னியால் தான் முடியும் என்று 42 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒபாமா ஆட்சி தங்கள் எதிர்பார்த்தவாறு இல்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment