நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக்கூடிய தீர்வு ஒன்றை ஜனாதிபதி விரும்புவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மலேசியா வாழ் இலங்கையர்களின் நிதி அன்பளிப்பைக் கொண்டு இராணுவத்தினரால் மீள் கட்டுமானம் செய்யப்பட்ட மன்னார், காத்தான்குளம் புனித கன்னி மரியாள் சிறுவர் இல்லத்தைத் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் மீள் குடியமர்த்தல் ஆகஸ்டு நடுப் பகுதியில் முற்றுப் பெற்றுவிடும். வடக்கில் உள்ள சகல நலன்புரி நிலையங்ளும் மூடப்படும். கண்ணிவெடிகள் அதிகம் புதைக்கப்படிருப்பதால் பதுக்குடியிருப்பில் மாத்திரம் சிறிது காலம் எடுக்கும் என்று கூறினார்.
30 ஆண்டுகால பிரச்சினையிலிருந்து 3 ஆண்டு காலத்துக்குள் வடக்கு வழமைக்குத் திருப்பியுள்ளது. இந்த சிறுவர் இல்லம் 2005 ல் இரண்டுமுறை எல்ரிரிஈயின் தாக்குதலுக்குள்ளானது. அரசாங்கம் இடம் பெயர்தோர் பாசறைகளை நிரந்தரமாக வைத்திருக்கப் போகின்றது என்ற வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியிலும், எல்ரிரிஈ யின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடிய அகதிகளுக்குப் புகலிடம் கொடுக்க அரசு அதிக அக்கறை காட்டியது என்று குறிப்பிட்ட அவர், ஏ9 வீதி, இரயில் பாதைகள், மின்சாரம், கட்டிடங்கள், நீர்ப்பாசன வசதிகள் போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசு வடக்கில் மேற்கொண்டு வருகின்றது. என்றும் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்புகின்றனர் என்றும் கூறினார்.
மன்னார் ஆயர் அதி வந். இராயப்பு ஜோசப், இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய உட்பட பலர் இநத நிகழ்ச்சியல் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment