கிராமத்திற்கு கிராமம் தபால் எனும் புதிய தபால் சேவை ஆரம்பம்
கிராமத்திற்கு கிராமம் தபால் எனும் பெயரில் புதிய தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். இப்புதிய தபால் சேவைக்கிணங்க 12 பிரதான தபாலகங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல் கட்டமாக காலி மாவட்டத்திலுள்ள தபாலகங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெயில் போவர்டிங், மெயில் பெக்கேஞ் சிஸ்றம் உட்பட 16 வகையான சேவைகள் இதனூடாக வழங்கப்படவுள்ளதாகவும், நாட்டிலுள்ள ஏனைய தபாலகங்களையும் ஒன்றிணைத்து மக்களுக்கு செயற்திறன்மிக்க சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment