இலங்கையிடமிருந்து செயல் திட்டம் ஒன்று வேண்டுமாம் - அமெரிக்கா
அமெரிக்காவைப் பொறுத்தளவில், இலங்கையில் பெரியதொரு நிறைவேற்றப்படாத நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது எனவும், அங்கு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் ஒன்று இருப்பதையிட்டு அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாகவும், ஆனால் இலங்கையிடம் நல்லிணக்க விடங்களைக் கையாள்வதற்கான ஒரு நடவடிக்கைத் திட்டம் இருக்க வேண்டும் என்று ஜனநாயகம், மனிதவுரிமை மற்றும் தொழிலுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் மைக்கல் பொஸ்னர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அண்மையில் வெளியிட்ட உலக மனிதவுரிமைகள் ஆண்டறிக்கையை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், இலங்யை உட்பட உலக ஊடகவியலாளருக்கான நேரடி வீடியோ நிகழ்ச்சில் கலந்து கொண்டபோதே இலங்கை ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொஸ்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் இலங்கையிடம் தொடர்ந்து கலந்துரையாடுவோம் என தெரிவித்த அவர் அண்மையில் வாசிங்டனில் வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ்சுடன் தானும் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனும் நடாத்திய கந்துரையாடலை நினைவுபடுத்தினார் பொஸ்னர்,
அத்துடன், அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் நோக்கம் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கின்றவை பற்றிய அடிப்படைத் தகவலைப் பெறுவதே என்றும், அது தங்களுக்கு கொள்கை உருவாக்கும் அடிப்படையே தவிர, கொள்கை அல்ல என்றும், ஒரு நாட்டை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான ஒரு கருவி மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment