அமெரிக்க விமானத்தை தகர்க்க முயற்சித்த அல்-குவைதாவின் சதி முறியடிப்பு
அமெரிக்க விமானத்தை, தகர்க்க அல்-குவைதா பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனை அமெரிக்க அதிரடிப் படையினர், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் கடந்த ஆண்டு சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவை பழி வாங்குவோம் என அல்-குவைதா தெரிவித்ததற்கிணங்க நோர்வை நாட்டைச் சேர்ந்த வெள்ளை இனத்தவரை தேர்வு செய்து அவரை முஸ்லிமாக மாற்றி, அவருக்கு அப்துர் ரஹ்மான் என பெயரிட்டு, ஏமன் நாட்டில் பல மாதங்கள் பயங்கரவாத அல்-குவைதா பயங்கரவாதிகள் அவருக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
அதன் பின், அமெரிக்க ஜெட் விமானத்தை அப்துர் ரஹ்மான் மூலம் தகர்க்க திட்டமிட்டனர். ஆனால், அமெரிக்க அதிகாரிகள் இந்த சதி வேலையை முறியடித்து விட்டதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்ததாக பிரிட்டனிலிருந்து வெளியாகும், "சண்டே டைம்ஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment