தூய்மையானவர்களுக்கே யானைச் சின்னத்தில் போட்டியிட சந்தர்ப்பமாம்!
வட மத்திய, சபரகமுவை மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளராகளை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு நேற்று பிட்டகோட்டேயில் உள்ள சிரிகொத்த என்ற ஐதேக தலைமையகத்தில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவின் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்கா மற்றும் கட்சியின் பொருளாளர் செனரத் கப்புகொட்டுவ ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இம்முறை 300 க்கு அதிகமானோர் புதிய வேட்பாளர்களாக விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் சற்றேனும் சமூக விரோத செயல்கள் மற்றும் ஊழல், ஏமாற்று, மோசடிச் குற்றம் சாட்டப்பட்டிப்பவர்களுக்கு வேட்பாளர் நியமனப் பத்திரம் வழங்கப்படமாட்டாது என்று பொதுச் செயலாளர் கூறினார்.
0 comments :
Post a Comment