அவுஸ்திரேலிய சட்டவிரோத குடிவரவுகள் சட்டத்தை தீவிரப்படுத்துமாறு வேண்டுகோள்.
அவுஸ்திரேலியாவிற்கான சட்டவிரோத குடிவரவுகள் தொடர்பிலான சட்டத்தை தீவிரப்படுத்துமாறு, அவுஸ்திரேலியா விற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க, அவுஸ்திரேலிய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு குடியகல்வதற்கு முயற்சித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோசடிக்காரர்களின் வலைகளில் சிக்குண்டு, கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த பலர் உயிராபத்தையும் எதிர்கொண்டதாகவும், இதனால், சட்டவிரோத மார்க்கங்களுடாக அவுஸ்திரேலியாவிற்கு வருவோரை தடுக்க, சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, திசர பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியகல்வோரை தடுப்பதற்கு, இலங்கை பொலிஸார் மற்றும் கடற்படையினர் கூட்டு வேலைத்திட்டங்களை அமுல்ப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment