எங்கெங்கு பொலிஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும்? அறிக்கையை சமர்பிக்கவும்- ஜனாதிபதி
புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக் கப்பட வேண்டிய இடங்களை கண்டறிந்து அது தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக் குமாறும், பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஆய்வு அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
வினைத்திறனான பொலிஸ் சேவையினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், துரிதமான கடமைகளை நிறைவேற்றுதல், இடம்பெற்று வருகின்ற குற்றச்செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இந்த புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவேண்டிய இடங்கள் அடையாளம் காணப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment