தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பதவிகளுக்காகவும் பல்வேறு விடயங்களுக்காகவும் தொடர் பிணக்குகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அக்கூட்டமைப்பினுள் புதியதோர் சர்ச்சை கிளப்பியுள்ளது. அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றில் மாவை 'என்னுடைய மகன் அரசியலுக்கு வர ஆசைப்படுகின்றார்: அவருக்கு ஒர் பொருத்தமான இடம்வேண்டும்' எனக் கேட்டாராம். மாவை அங்கே வேண்டி நின்ற பொருத்தமான இடம் வரும் வட மாகாணசபைத்தேர்தலில் மகனுக்கு சீட்டு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு முதலமைச்சர் பதவிக்கு பலர் முண்டியடித்துக்கொண்டு நிற்கும் இத்தருணத்தில் மாவையின் இக்கேள்வி பலரதும் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இதில் மிகவும் சுவாரசியமான விடயம் யாதெனில் குறிப்பிட்டவிடயம் கூட்டமைப்பிலுள்ள பலருக்கும் கசப்பானதும் அருவருப்பானதுமான விடயமாக உள்ளபோதும் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் விடயத்தினை சில ஊடககாரர்களிடம் தெரிவித்து பகிரங்கப்படுத்துங்கள் என்றும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் விடத்தினை கிரகித்துக்கொண்டு முதலில் சிறிதரனின் சகோதரனின் இணையத்தினூடாக வெளிக்கொண்டுவராமல் தம்மிடம் சொல்வதன் நோக்கம் பற்றி வினவத்தொடங்கியுள்ளனர். வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் பதவியை சிறிதரனும் குறிவைக்கிறார் என்ற செய்திகள் இவரின் இச்செயற்பாடு உறுதிப்படுத்துகின்றதா?.
No comments:
Post a Comment