Monday, July 9, 2012

ஆசிய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவு – ஜனாதிபதி.

இது ஆசியா எழுச்சி கொள்ளும் யுகமாகும். ஆசிய நாடுகளுடன் நட்புறவைப் பேணலும் வலுப்படுத்தலும் அவசியமானது. மேற்கு நாடுகள் தற்போது ஆசியா நாடுகள் மீது கவனம் அக்கறையும் செலுத்துகின்றன என்று வெளிநாடுகள்ளிலுள்ள இலங்கையின் இராஜதந்திரிகளுக்கு தியத்தலாவையில் இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறினார். அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சகல நாடுகளுடனும் நட்புறவைப் வலுப்படுத்தலும் பக்கத்து நாடுகளுடன் இருதரப்பு உறவைப் பேணிவரல் வேண்டும் என்றும் அவர் வலுயுறுத்தினார்.

வெளிநாடுகளில் உள்ள புகலிடத் தமிழர்கள் இலங்கைக்கு எதிராகத் தீவிரமாகப் பிரசாரம் செய்வதைத் தூதர்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்புகொண்டு இலங்கைக்கு எதிராக தவறான பிரசாரத்தைச் செய்வது இலங்கைக்கு வெளியுறவுக் கொள்கை ரீதியிலான சவாலாக இருக்கிறது. இந்தச் சவாலை நமது தூதர்கள் முறியடிக்க வேண்டும். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்கள் எப்போதும் தமது நாட்டுக்கு நன்மையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டும். தொலைசியில் உரையாடுவதும், கெமராக்களுக்குப் போஸ் கொடுப்பதும் மட்டும்தான் தமது கடமை என்று நினைனகக்கூடாது என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com