Wednesday, July 11, 2012

பிரபல பாதாள உலக உறுப்பினரான அஸ்மிக்கு ஐ.தே.க பாதுகாப்பு வழங்கிய விடயங்கள் அம்பலம்

கொழும்பின் பிரபல பாதாள உலக உறுப்பினரான மாமா அஸ்மி என்பவருக்கு, ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாதுகாப்பு வழங்கிய விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மாமா அஸ்மி என்பவர் கொலை, பாலியல் துஷ்பிரயோகம், கொள்ளை, போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் பிரபலமானவர் எனவும், மாலிகாவத்தை பிரதேசத்தை தளமாக கொண்டு இவர் தனது நடவடிக்கைளை முன்னெடுத்து வந்துள்ளதாக, புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பிரபல உறுப்பினர் ஒருவர் மாமா அஸ்மிக்கு பாதுகாப்பு வழங்கி, பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து அவரை காப்பாற்றுவதற்கு முன்நின்று பாடுபட்டு வருவதாகவும், தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

சட்டவிரோத ஆயுதங்களுடன் மாமா அஸ்மியின் தலைமையின் கீழ் பல்வேறு வன்முறைக் கும்பல்கள் செயல்பட்டு வந்ததுள்ளதுடன், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குற்றச் செயல்களிலும் இக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவரை கைது செய்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் பல்வேறு தடவைகள் முயற்சித்த போதும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் அபயமளித்து குற்றவாளிகளை பாதுகாக்க முயன்றதால் அம்முயற்ச்சிகள் தோல்விகளை தழுவியுள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் ஆதரவும் மாமா அஸ்மிக்கு கிடைத்து வருகின்றனது, எனவும் தெரிவிக்ப்படகின்றது.

கொழும்பில் போதை பொருள் கடத்தல் மன்னனான அஸ்மி விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பு அளிப்போர் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விரைவில் அம்பலப்படுத்தப்படுமெனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com