காதலியை கொன்ற பைலட் விமானத்தை கடத்தி தப்ப முயற்சி! ஆனால் விதி விளையாடியது!
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரையன் ஹெட்ஜ்லின் (வயது 40). ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட்டாக வேலைபார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது காதலியான கிறிஸ்டினா கொலை செய்யப்பட்டா. இவரது உடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்டது.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அவரது காதலன் பிரையன் ஹெட்ஜ்லின் கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதனை அறிந்த ஹெட்ஜ்லின், தப்பிக்கும் முயற்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்தார். திடீரென தனது மோட்டார் சைக்கிளில் உத்தா மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் விமான நிலைய ஓடுபாதைக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அங்கிருந்த பயணிகள் விமானத்தை கடத்தி தப்பிக்க முயன்றார்.
ஆனால் அது கட்டுப்பாட்டை இழந்து கார் பார்க்கிங் ஏரியாவில் விழுந்தது. அப்போது என்ஜின் தீப்பிடித்தது. உடனடியாக போலீசார் அந்த விமானத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பிரையன் ஹெட்ஜ்லின் இறந்து கிடந்தார். அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஹெட்ஜ்லின் கடத்தி சென்ற விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை.
மேலும் அவர் சென்ற ஓடுபாதையில் வேறு விமானங்களும் புறப்படவில்லை. இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அனைத்து வர்த்தக விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
0 comments :
Post a Comment