ஹிங்குரான சீனி உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்
கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஹிங்குரான சீனி உற்பத்தி தொழிற் சாலையின் உற்பத்தி பணிகள் ஆரம்ப மாகியுள்ளதாக கல்லோயா பெருந் தோட்டக் கம்பனி தெரிவித்துள்ளது. 15 வருடங்களாக செயலிழந்து காணப்பட்ட குறித்த சீனி உற்பத்தி தொழிற்சாலையை கல்லோயா பெருந்தோட்டக் கம்பனி சுவீகரித்ததை தொடர்ந்து, உள்நாட்டு சந்தைக்காக, மீள சீனி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரச தொழில் முயற்சி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் விழி. கமகே, கல்லோயா பெருந்தோட்ட கம்பனியின் நிறைவேற்று பணிப்பாளர் லலித் கமகே ஆகியோர் தலைமையில் முதல் கட்ட உற்பத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக கம்பனி தெரிவித்துள்ளது.
ஹிங்குரான சீனி உற்பத்தி தொழிற்சாலையை, நவீனமயப்படுத்துவதற்காக ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவிற்கும மேற்பட்ட நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது 800 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு சேவையாற்றுவதுடன், எதிர்காலத்தில் மேலும் பல தொழில் வாய்ப்புகளை வழங்க, எதிர்பர்ர்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளொன்றுக்கு 200 டொன் கரும்பு அரைக்கப்படுவதுடன், 200 டொன் சீனியை உற்பத்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுவதாக, கல்லோயா பெருந்தோட்டக் கம்பனி தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment