எல்.ரி.ரி.யை ஆதரிப்பவர்கள் மீது தடுப்புச் சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கை - இந்திய மத்திய அரசு
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அனைத்து பொலிஸ் பிரிவினருக்கும், இந்திய மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலாளர் அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தோல்வியடைந்த பின்னரும் ஈழம் என்ற கொள்கையை விடாமல், ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டியும், பொய் பிரசார நடவடிக்கைகள் மூலம் மக்களை தீய பாதையில் திசை திருப்ப செயல்பட்டு வருவதுடன், புலம் பெயர் நாடுகளிலுள்ள புலிகள் சிதறிக் கிடக்கிற தீவிரவாதிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற் கொள்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரிவினைவாத தமிழர் குழுவினரும், புலிகளின் ஆதரவாளர்களும், மக்களிடையே பிரிவினைவாத போக்கினை தொடர்ந்து வளர்த்து வருவதுடன், தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளதால், பொது அமைதிக்கு தொடர் அச்சுறுத்தல், குந்தகம் விளைவிப்பதாக கருதி, புலிகளை சட்டவிரோதமான அமைப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே, 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, இந்த புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது உடனடியாக செயலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமது சுய அரசியல் ஆசைகளுக்ககாக, இலங்கை பிரச்சினையை பிரசாரம் செய்யும் இந்திய அரசியல் வாதிகளுக்கு இது ஒரு நல்ல பாடம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment