ஆப்கானிஸ்தான் நாட்டு இராணுவ வீரர் நடத்திய தாக்குதலில் அமெரிக்க படையினர் ஐவர் காயம்
ஆப்கானிஸ்தான் நாட்டு இராணுவ வீரர் ஒருவர் நடத்திய தாக்குதலில் அமெரிக்க படையினர் ஐவர் காயமடைந்துள்ள தாகவும், ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணம் ஒன்றில் அமைந்துள்ள அமெரிக்க படையினரின் முகாமிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலை நடத்திய ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர் தலைமறைவாகியுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாணைகள் இடம்பெற்று வருகின்றன என தெரிவிக்கப்படுகின்றது
0 comments :
Post a Comment