Wednesday, July 4, 2012

ஒருவாரத்திற்குள் உங்கள் பிரச்சினைகட்கு தீர்வு தருவேன். கிட்ணன் உறுதி மொழி

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 2010ம் ஆண்டு, 2011ம் ஆண்டு பட்டம்பெற்ற உள்வாரி மாணவர்களின் மீள்பரீட்சைப் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட்டு பட்டதாரி மாணவர்களின் பிரச்சினைகளை ஒருவாரத்திற்குள் நிவர்த்திசெய்யவதாக கிழக்குபல்கலைகழக உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா பாதிக்கப்பட்ட பட்டதாரி மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது!
 
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட பட்டதாரிபயிலுனர் நியமனங்களில் 2010ம், 2011ம் ஆண்டு பட்டம்பெற்ற மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத்தேர்வு இன்றையதினம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்றது.
 
மேற்படி நேர்முகப்பரீட்சையில் கலந்துகொண்ட பல பட்டதாரி மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக தரநிலைச்சான்றிதழை மட்டுமே கொண்டுவந்ததாகவும் அவர்களை பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததுடன் ஒருவாரகாலத்திற்குள் நிரந்தர தரநிலைச்சான்றிதழை சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரமே பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்ட 2011ம் ஆண்டு பட்டம்பெற்ற கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் பலர் இன்றையதினம்(04.07.2012) கிழக்குபல்கலைகழக உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா அவர்களை சந்தித்து தங்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
 
அதனைதொடர்ந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணிபகிஸ்கரிப்பு நடைபெற்றுவரும் நிலையிலும் கூட மனிதாபிமான அடிப்படையில் மாணவர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் நோக்குடன் மாணவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய உபவேந்தர் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன்கருதி நிர்வாக சீர்கேடுகளை நிவர்த்தி செய்து மேற்படி மாணவர்களின் பிரச்சினைகளை ஒருவார காலத்திற்குள் தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்ததுடன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா அவர்களுக்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com