விற்ற காணிக்கு சிங்களவரகள் இப்போது உரிமை கோருகின்றனர்! அதை அரசாங்கம் தீர்க்கும்.
சண்டை நடந்து கொண்டிருந்த போது கிழக்கில் தமது காணிகளையை விற்றுவிட்டு ஓடிய சிங்களவர்கள் இப்போது வந்து காணிக்கு உரிமை கோருகிறார்கள். எனவும் அது சட்டப் பிரச்சினை. அதை மாவட்ட செயலாளர் தீர்ப்பார் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம் பெற்ற இந்த ஊடக கலந்துரையாடலில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இப்பகுதியில் மக்களுக்கு சிறு சிறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை அரசாங்கம் தீர்க்கும். சிஙகளவருக்குள்ள பெரிய பிச்சினை கல்வி மற்றும் நீர். நாங்கள் அவற்றைத் தீர்ப்போம். முதலமைச்சர் என்ற முறையில் சிஙகளர், தமிழர், முஸ்லிம் எல்லோரையும் ஒரேவிதமாக கவனித்தேன். இந்த தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment