மன்னார் நீதவானை தீரப்பை மாற்றும் படி தொலைபேசியில் அச்சுறுத்தினார் என்றும், மன்னார் நீதிமன்ற உடைப்புச் சம்பவத்தின் சூத்திரதாரி என்று கருதப்படுபவருமான அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் மன்னார் நீதவானை இடமாற்றம் செய்யுமாறு கோரியதாகவும் அதற்கு அது தமது வேலை என்று பதிலளித்தகாவும் மேற்படி ஆணைக்கழுவின் செயலாளரான மஞ்சுளா திலகரட்ன கூறுகின்றார். அத்துடன் மேற்படி அமைச்சர் தம்மை அச்சுறுத்தியது தொடர்பாக மன்னார் நீதவானும் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்படி அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை நீதிபதிகள் சங்கமும், சட்டத்தரணிகள் சங்கமும் ஆயத்தமாகி வருவதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.உ., விஜேதாச ராஜபக்ஷ ஊடாக அறிய முடிகிறது.
மன்னார் சம்பவம் தொடர்பாக குற்றவாளியைக் கண்டு பிடிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறையைப் பணிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி ராஜபகஷ கட்டளையிட்டுள்ளார். உத்தியோகபூர்மாகத் தனக்குத் தெரியாததால் இது தொடர்பாக கருத்துக்கூற முடியாது என்று ஐமசுகூ பொதுச் செயலாளர் மறுத்துவிட்டார்.
Mervinum,Dumindayum seithadai vidawa rishard sencharu ?
ReplyDeleteதலைப்பு பிரமாதம் அனால் கீழே உள்ள செய்திதான் தலைப்புக்கு அப்பார்பட்டுள்ளது ரிசாத் உண்மைலேயே கழுதைதான் ஏனெறால் வடபுலத்தில் பாதிக்க பட்டுள்ள தமது சமூகத்தின் சுமைகளை சுமக்கிறார் அல்லவா?
ReplyDeleteஅந்த வகையில் அச்சமுகம் ரிசாத்தை கழுத என்று என்றுவதில் பெருமை பட்டு கொள்ளும்.
போலி வேடம் போட்டு மக்களை ஏமாற்றும் ஆசாமிகளுக்கு நீதி, நியாயம் என்பது தெரிவதில்லை.
ReplyDeleteஅப்படியாயின் கழுதைக்கு எப்படி தெரியும்?