இலங்கை விமானப்படையினர் பயிற்சிகளில் இருந்து வெளியேற்றப்படவில்லை - வெளிவிவகார அமைச்சு.
சென்னை - தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டிருந்த இலங்கை விமானப் படையினர், அங்கிருக்கும் அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
இலங்கை விமானப்படையினர் தமது பயிற்சிகளை இந்தியாவில் தொடர்ந்தும் பெற்று வருவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, சென்னையில் ஒரு கட்ட பயிற்சி நடவடிக்கைகள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், இரண்டாம் கட்டமாக இலங்கை விமானப்படையினர் பெங்களுரில் தமது பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment