வைத்தியசாலை கட்டடத்தில் இருந்து குதித்து நோயாளி தற்கோலை
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் மலசலகூட கட்டடத்தின் மேல் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மூன்றாம் மாடியில் நான்காம் வாட்டில் சிகிச்சைப் பெற்று வந்த 40 வயதுடைய கனகராஜ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நோயாளி பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று பகல் உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment