நான் முன்னாள் தளபதிகளைப் போலல்ல. வீரர்களுக்கு செவிமடுக்கின்றேன். இராணுத்தளபதி.
ஒரு சில முன்னாள் படைத்தளபதிகளைப் போலல்லாது தான் எப்போதும் தன்னை அணுகும் படைவீர்ர்களின் கருத்துகளுக்குச் செவிமடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியா தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக படைவீர்ர்களிடையே கடுமையான ஒழுக்க மீறல்கள் இடம் பெற்றதில்லை யென்றும் இதனால் இராணுவம் மகிழ்ச்சியடையலாம் என்றும் அவர் கூறியதாக இராணுவ ஊடக அறிக்கை கூறுகின்றது.
செவிமடுக்காத அந்த சிலர் யாரென்று அவர் குறிப்பிடவில்லை. நாடு எமது வகிபாகம் மற்றும் சேவையையிட்டு அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டிற்கும் நாட்டின் வளர்ச்சிக்காவும் நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், நான்தான் அவற்றையெல்லாம் செய்தேன் என்று சொல்ல வரவில்லை, ஆனால் நாட்டிற்காக நாம் அதனைச் செய்தோம் என்றார் அவர்.
இராணுவ அலுவலர்கள் அரசியலில் நுழைய எதிர்பார்க்க் கூடாது. பதவியில் இருக்கும் அரசாங்கத்தைக் காப்பதுதான் நமது வேலை. நீங்கள் எல்லோரும் படையின் அடையாளத்தைக் கடுமையாகப் பேண வேண்டும். எப்போதும் உங்கள் நல்ல சேவையின் பயன் படையணிக்குச் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிச் செயற்றிட்டங்கள், பாதுகாப்பு, அமைவிடங்கள் மற்றும் நிர்வாகம் என்பவற்றுக்கு அமைய இராணுவம் மறுசீரமைக்கப்படும். இந்த ஏற்பாடுகளின் கீழ் தாக்குதல் அணிகள் பாதுகாப்புகாப்புக்கு மட்டும் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment