Tuesday, July 3, 2012

ஒவ்வொரு ஊரிலும் ஒரு காடு, அமைச்சர் பசிலின் ஏற்பாடு.

இலங்கையின் சகல ஊர்களிலும் ஒரு காட்டினை உருவாக்குவோம் என்று கல்கிசை ஹோட்டலில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்திருந்த, காலநிலை மாற்றத்தால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொண்டு பேசும்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சவர் பசில் ராஷபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு கிராமமும் பசுமை நிறைந்த சுற்றாடலைக் கொண்டிருப்பதானது ஊருக்கு நல்லது என அதரிவித்த அவர், கடந்த காலத்தில் நாம் காடுகளை நேசித்தோம். எதிர்கால சந்ததியின் நன்மைக்காக காடுகளை வளர்ப்பதோடு, அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராகத் தேவையான சட்டங்களைக் கொண்டு வருவோம் என அமைச்சர் பசில் ராஷபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com