மரண தண்டனைக்கு பரந்த ஆதரவு – கெகலிய ரம்புக்வெல.
சிறுவர் துஷ்பிரயோகக்காரர்கள் மற்றும் போதைப்பொருள் மன்னர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற பொதுக் கருத்தொருமைப்பாடு நீண்ட கருத்துப் பரிமாறலுக்குப் பின், பொது மக்கள், அமைச்சரவை, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உருவாகியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் நடைமுறையில் இருந்து வந்த மரண தண்டனைக்கு 1977 ன் பின்னர் நிறைவேற்றதிகாரம் உள்ளவர்கள், மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பம் வைக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது அலுக்கோசுகளை நியமிக்க நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக கூறும் அமைச்சர், மரண தண்டனை குற்றங்களைக் குறைப்பதாக சான்றுகள் இல்லையென்றும் குறிப்பிட்டார். எல்லாக் கட்சி அரசியல்வாதிகளும் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும், ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணணி ஆளும் கட்சியாக இருப்பதால் பெரிதாகப் பேசப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment