மீட்டர் டெக்ஸிகளில் கட்டணம் காட்சிப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது - சாரதிகள் சங்கம்
மீட்டர் டெக்ஸிகளில் கட்டண முறைமை தொடர்பாக கட்டண மானிகள் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், கட்டண மானிகளை தருவிக்கும் நிறுவனங்கள் தாம் விரும்பிய போக்கில் தரவுகளை உள்ளடக்கி கட்டணங்களை தீர்மானிக்கலாம் என்பதால், மீட்டர் டெக்ஸிகளுக்கு நிலையாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதில்லை குறித்த தொழில்சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இரவு 10 மணியின் பின்னர் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு நிர்ணயித்த கட்டணங்களுக்கு மேலதிகமான 15 வீத கட்டணங்களை அறவிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டண மானியை பொருத்தும் போது முற்பகல், பிற்பகல் என நேர மாற்றத்தை மேற்கொள்வதற்கு இரகசிய குறியீட்டு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிடும் வகையில் மானியில் மோசடியான நேரமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவதானம் செலுத்திய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், பயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்கும் முகமாக, கிரமமான முறையொன்றின் மூலம் மீட்டர் டெக்ஸி சேவையை நடாத்துவதற்கு உரிய ஆதரவை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment