தியதலாவ இராணுவ பயிற்சி கல்லூரியில் சர்வதேச நாட்டு தூதுவர்களுக்கு பயிற்சிப்பட்டறை
சர்வதேச நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கான விசேட பயிற்சிப்பட்டறை ஒன்றை தியதலாவ இராணுவ பயிற்சி கல்லூரியில் எதிர்வரும் 7, 8 ஆம் திகதிகளில் நாடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பயிற்சி பட்டறையானது சர்வதேச நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள், மற்றும் உயர்ஸ்தானிகர்கள் அந்தந்த நாடுகளில் சர்வதேச ரீதியில் தீர்மானங்களை நிறைவேற்றுதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இத்தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கான விசேட கல்வி சுற்றுலா எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 11 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு குறித்த தூவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும், இதன்போது, கிழக்கு மாகாண சபையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment