Saturday, July 28, 2012

சம்பூரில் பாக்கிஸ்தானின் உதவியுடன் அணுமின் நிலையமாம்! மன்மோகனிடம் தூதர் ஒப்பாரி

இலங்கையின் மின்சக்தி தேவையை நிறைவு செய்யும் பொருட்டு எதிர்காலத்தில் பாக்கிஸ்தானின் முழு பங்களிப்புடன் திருகோணமலை, சம்பூரில் அணு மின்நிலையம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியா டுடே சஞ்சிகை கூறுகின்றது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் அசோக் காந்தா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அண்மையில் நேரில் தெளிவுபடுத்தி இருப்பதாகவும் அச்சஞ்சிகை கூறுகின்றது. இது சீனாவின் உதவியுடன் இலங்கையில் தனது பலத்தை பரவச் செய்வதற்கான பாக்கிஸ்த்தானின் வேலைத்திட்டம் என்றும் அவர் விளக்கியிருக்கிறார்.

பாக்கிஸ்த்தானுக்கு கொழும்புடன் பாதுகாப்பு தொடர்பை விரிவுபடுத்திக் கொள்ளும் தேவை உண்டென்றும், தமிழ்நாட்டின் அழுத்தத்தின் காரணமாக இந்திய நடுவண் அரசின் இலங்கையின் பாதுகாப்புச் செயற்பாடுகளில் பாக்கிஸ்த்தான் நுழைவதாகவும் அச்சஞ்சிகை குறிப்பிடுகின்றது. ரி-55 யுத்த டாங்கி முறைமையை நவீனப்படுத்த பாக்கித்தானின் உதவி கிடைத்ததென்றும் இலங்கைப் போர்த்தளவாடங்களை வலுப்படுத்த இந்தியா உதவாதவிடத்து அந்த இடத்தை பாக்கித்தான் பிடித்துக்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளாராம்.

சீனா, பாக்கிஸ்த்தானுடன் இலங்கையின் நெருக்கம் இந்தியாவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது எதிரி நாடான பாக்கித்தான் இலங்கையில் அதிக இடம் பெறுவது தன் மீதான எதிர்ப்பை அதிகரிக்கும் என்று இந்தியா கருதுகிறது. ஜெனிவா மாநாட்டில் இலங்கைகு எதிராக இந்திய வாக்களித்தது இருநாடுகளுகிடையிலான நல்லெண்ணத்தைப் பழுதாக்கியுள்ளது என்று அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment